Russia to face losses from YouTube! : யூடியூப் நிறுவனத்தால் இழப்பை சந்திக்கும் ரஷியா!

0
30

கண்டனம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களுடைய செயல்பாடுகளை நிறுத்தி வருகின்றன.

யூடியூப் நிறுவனம்

ரஷிய அரசின் நிதிஉதவி பெற்று செயல்படும் செய்தி ஊடகங்களை சர்வதேச அளவில் யூடியூப் நிறுவனம் தற்போது முடக்கி உள்ளது. இதன் மூலம் ரஷியாவின் செய்தி ஊடகங்கள் இனிமேல் யூடியூப் பக்கங்களில் இடம் பெறாது. இது பல ரஷிய செய்தி நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறை

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இப்போது வன்முறை நிகழ்வுகளின் கொள்கையின் கீழ் வந்துள்ளதாகவும், அதன் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப் செய்தி தொடர்பாளர் ஃபர்ஷாத் ஷாட்லூ தெரிவித்துள்ளார்.

மறுப்பு

சர்வதேச அளவில் எந்தெந்த சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன என்பதை குறித்தும், அவை எப்போது நீக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here