Samantha interviewed song of the movie Pushpa! : புஷ்பா படத்தின் பாடலை குறித்து பேட்டி அளித்த சமந்தா!

0
89

அறிமுகம்

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சமந்தா. அறிமுகமான பிறகு சில படங்களில் நடித்த அவருக்கு கத்தி படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

samantha 4

திருமணம்

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பிறகும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்துள்ளார்.

samantha 3

தகவல்கள்

சில படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடித்தது நாக சைதன்யாவிற்கு பிடிக்கவில்லை எனவும், இதன் காரணமாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் வெளிவந்தன. இதனை உண்மையாக்கும் வகையில் இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர்.

samantha 1

புஷ்பா

சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொண்டாலும் சமந்தா திரைவாழ்க்கையில் வெற்றிகரமாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் புஷ்பா படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடியது சிறந்த முறையில் வைரலானது.

samantha 5

நடனம்

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு இவர் நடனம் ஆடியது இளைனர்கள் மத்தியில் வைரலானதை தவிர பல சர்ச்சை அவருக்கு சிக்கியது. இந்த நடனம் காரணமாக இவருக்கு பல பாலிவுட் படத்தில் வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

samantha 7

வரவேற்பு

சமீபத்தில் ஒரு பேட்டியில் சமந்தா புஷ்பா பாடலைப்பற்றி பேசியுள்ளார். நான் நடனமாடிய பாடலுக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என பேட்டியில் கூறியுள்ளார். ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கு சமந்தா நன்றிகளை தெரிவித்துள்ளார். சமந்தா நடித்துவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here