Sexual harassment actress Bhavana : நான் பாதிக்கப்பட்டவள் அல்ல வாழ்க்கையில் மீண்டு வந்தவள் மனம்திறந்த நடிகை பாவனா

0
40

இந்திய திரையுலகில் சுமார் 80க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாவனா 2017 ஆம் ஆண்டு கொச்சிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். குறிப்பாக பாவனாவுடன் 12க்கு கேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்த திலீப் பெயரும் இதில் இடம் பெற்றது. பின் திலீப் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பிறகு அவர் ஜாமின் கிடைக்கும் வரை 3 மாதம் சிறையில் இருந்துள்ளார் பாவனா நான் ஒரு மகிழ்ச்சியான சுபாவம் கொண்டவள்.

திலீப்

ஆனால் அந்த நேரத்தில் என் வாழ்க்கை தலைக்கீழாக மாறியது. சமூக வலைத்தளங்களில் நான் சிரித்த படங்களைத்தான் மக்கள் அனைவரும் பார்கிறார்கள். ஆனால் நான் நன்றாக வேதனையில் இருந்தேன் என பாவனா தொலைபேசியில் தெரிவித்தார். இப்படி தாக்கப்பட்ட நடிகையான நான் மீண்டும் மீண்டும் கோட்டுக்கொண்டிருந்த கேள்வி “ஏன் நான்” என்பது மட்டுமே. நான் இதிலிருந்து வெளிவர வழிதேடிக் கொண்டிருந்தேன். பின் 2020இல் நீதிமன்ற விசாரணைக்கு நான் ஆதாரங்களை சமர்பிப்பது தொடர்பாக 15 நாட்கள் செலவிட்டேன்.

ஸ்டுடியோ

ஆனால் அங்கு எல்லாம் மாறின இப்போது நான் எல்லாத்தையும் கடந்து விட்டு முன் செல்ல நினைக்கிறேன். ஆனால் எல்லாத்தையும் மறக்க நினைக்கும் போது தான் எல்லாம் நினைவுக்கு வருகிறது ஆனால் இப்போது ஒரு சின்ன விஷயம் கூட நினைவுக்கு வருகிறது. 2017 அந்த சம்பவம் நடந்த அன்று நான் சொந்த ஊரான திருச்சூரிலிருந்து ஒரு டப்பிங் பதிவுக்காக கொச்சிக்கு சென்று கொண்டிருந்தேன். பிறகு அடுத்த நாள் காலையில் டப்பிங்க் ஸ்டூடியோவில் இருந்திருக்க வேண்டிய பாவனா இரவே கடத்தப்பட்டார். அதன் பிறகு பாலியல் தாக்குதல் நடத்திய நபர்கள் அதனை வீடியோவாக எடுத்துள்ளன. பிறகு என்னை மிரட்டும் திட்டமாக இருந்திருக்கலாம் என பேசியுள்ளார்.

பாவனா

சினிமா நட்சத்திரங்கள் இந்த விவகாரத்தின் மீது ஊடக வெளிச்சம் பெரும் அளவில் விழுந்தது. பாவனா இரவு 7 மணிக்கு ஏன் பயணம் செய்கிறாள் என்றும் கேள்வி வந்தது. சிலர் அவர் ஒழுக்கத்தை கேள்வி எழுப்பினர் உடனே நான் உடைந்தே போனேன். எல்லாரும் என்னை ரொம்ப காயப்படுத்தினார்கள். சில நேரத்தில் எனது நுரையீரல் வலிக்கும் அளவுக்கு கத்தி அழ வேண்டும் என தோணியது. நான் ஒரு பிரபலமான நடிகை. முதலில் நான் கடத்தப்பட்டதான செய்திகள் வெளியான போது தொலைக்காட்சிகள் எனது பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தியாது.

இன்ஸ்டாகிராம்

பின் பாலியல் வன்கொடுமை பற்றிய விவரம் தெரிந்தவுடன் பெயரையும் புகைப்படங்களையும் அகற்றினர் ஆனால் இதற்கு விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது பாலியல் தாக்குதலுக்குள்ளாகி மீண்ட பாவனா பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவு வெளியிட்டிருந்தார் நான் குற்றம் செய்தவள் இல்லை. என்றாலும் என்னை அவமானப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தது என கூறினார் இவர்கள் எனக்காக பேசுவதைப் பார்க்கும்போது நான் தனியாக இல்லை என்றும் அவர் அந்தப் பதிவில் எழுதியிருந்தார்.

நட்சத்திரங்கள்

பிறகு இந்த பதிவு மோகன்லால் மம்மூட்டி என பல மலையாள திரையுலகின் நட்சத்திரங்கள் பலராலும் பகிரப்பட்டிருந்தது பின் பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த பதிவைப் பகிர்ந்து ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர் பின் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது. பின் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ எப்போ வேண்டுமானாலும் பரவலாம் என்ற அச்சமும் எப்போதும் இருந்தது. பின் கடந்த 5 வருடங்கள் அவ்வளவு எளிதாக இல்லை 100 முறையாவது நான் எனது தோல்வியை ஒப்பு கொள்ள நினைத்து இருக்கேன். என் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் எனது வழக்கறிஞர்களிடம் கூட கேட்டிருக்கிறேன் இதையெல்லாம் மாற்றிவிட்டு பழைய நிலை திரும்ப வேண்டும் என்று.

தற்கொலை

இந்த நட்டை விட்டுவிட்டு வேறேங்காவது போக பலமுறை நினைத்திருக்கிறேன். பிறகு நான் பலமுறை தற்கொலைக்கு யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற யோசனைகள் என் மனதை மாற்றிக்கொண்டே இருக்கும். என் தரப்பின் தவறு இல்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. எனவே எதுவும் தவறான முடிவு எடுக்க கூடாது என் பதிலளித்தார் பாவனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here