அதிர்ச்சியை ஏற்படுத்திய தோனியின் சம்பளம் – சிஎஸ்கே அணி தக்கவைத்த 4 வீரர்கள்

0
96

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில் ஒருவரான தோனியின் ஊதியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ளது. புதிய அணிகள் வருவதால் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

2 இந்திய வீரர்கள் , 2 அயல்நாட்டு வீரர்கள், என தக்கவைத்து கொள்ளலாம். 3 இந்திய வீரர்கள் , ஒரு அயல்நாட்டு வீரர் என்ற முறையில் தக்கவைத்து கொள்ளலாம்.

தோனியின் ஊதியம்

அனைத்து அணிகளும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பட்டியல் தனி கவனம் ஈர்த்துள்ளது. அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் எம்.எஸ்.தோனி தான் இருப்பார் என காசி விஸ்வநாதன் அறிவித்துவிட்டார். தோனிக்கு ரூ.16 கோடி ஊதியமாக இதனால் இருந்திருக்க வேண்டும். இன்று தோனி 2வது வீரராக தக்கவைக்கப்பட்டு ரூ.12 கோடி ஊதியமாக உள்ளது. தோனியின் வயது இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

முதன்மை வீரர்

முதன்மை வீரராக சீனியர் ஆல்ரவுண்டர் ஜடேஜா அணியில் தக்கவைக்க பட்டார். இவரின் பவுலிங்கை போன்றே பேட்டிங்கும் அற்புதமாக இருந்தது. அதனால் அவரை அணியில் இருந்து கழட்டிவிட முடிவெடுக்க வில்லை. ரூ.16 கோடி ஊதியமாக நிர்ணயிக்கபட்டுள்ளது. அடுத்த சிஎஸ்கே கேப்டனாக கூட வாய்ப்புகள் உள்ளதாக உள்ளது.

மூன்றாவது வீரர்

அணியில் அயல்நாட்டு வீரர் தேர்வில் முதலில் ஃபாப் டூப்ளசிஸ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கான ஊதியத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக மொயீன் அலியை 3 வது தேர்வாக தக்கவைக்க முடிவெடுத்துள்ளது. மொயீன் அலிக்கு ஊதியம் ரூ.8 கோடி தரவுள்ளதாக கூறப்படுகிறது.

நான்காவது வீரர்

சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா 4 வது வீரராக தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இளம் வீரர் மீது நம்பிக்கை வைத்த சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டை 4 வது வீரராக அறிவித்தது. இவருக்கு ஊதியமாக ரூ. 6 கோடி வழங்கப்பட உள்ளது.

மெகா ஏலம்

ஒவ்வொரு அணியும் ஏலத்தின் போது அதிகபட்சமாக ரூ.90 கோடி வரை செலவு செய்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளது. சிஎஸ்கே ஏற்கனவே 4 வீரர்களை தக்கவைத்து கொண்டதால் ரூ. 42 கோடியை செலவு செய்துவிட்டது. மீதமுள்ள தொகையை வைத்து தான் மெகா ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here