South China Sea! : தென் சீனக்கடலில் செய்த ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

0
48

ஆய்வு

தென்சீனக்கடலில் சீன அறிவியல் அகாடமி, நாட்டின் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் ஒரு பிரமாண்ட ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வானது தென் சீனக்கடலில் அதிக வளர்ச்சி விகிதம், தெளிவான வருடாந்திர வளர்ச்சி அடுக்கு, பரந்த பரவலான பவளப்பாறையை மையமாக கொண்டது.

தொடர்பு

கடல்நீர் சூழலின் மாற்றத்தை கண்டறிய இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பொரிட்ஸ் பவளம், கடல் மட்டத்தின் ஆக்சிஜன் அளவு, நிலையான ஐசோடோப்புகள், கடல் மேற்பரப்பு உப்புத்தன்மை, வெப்பநிலை, தென் சீனக் கடலின் மழைப்பொழிவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றை ஆய்வுகள் செய்தனர்.

அதிர்ச்சி தகவல்

இந்த ஆய்வின் முடிவில் தென் சீனக் கடலின் மட்டம் ஆனது 1900 ஆம் ஆண்டு முதல் 150 மிமீ உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடல் மட்டம்

1850 முதல் 1900 வரை ஆண்டுக்கு 0.73மிமீ குறைந்து வந்துள்ள நிலையில் 1900- 2015 வரை ஆண்டுக்கு 1.31மிமீ உயர்ந்துள்ளது என ஆய்வுகள் காட்டுகிறது. 1993 முதல் அங்கு ஆண்டுக்கு 3.75 மிமீ உயர்ந்துள்ளது.

பசுமை இல்ல வாயு

கடல் மட்ட மாற்றங்கள் 1850 முதல் 1950 வரை சூரிய செயல்பாடு, பசுமை இல்ல வாயு கலவையின் விளைவாக இருக்கலாம் என கண்டறிந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் கடல் மட்டத்தின் விரைவான உயர்வுக்கு பசுமை இல்ல வாயுக்கள் முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முக்கிய நாடுகள்

இந்த ஆய்வினை பேலியோகாலஜி, பேலியோஜியோகிராபி, பேலியோக்ளிமேட்டாலஜி போன்ற இதழ்களில் வெளியிட்டுள்ளது. தென் சீனக்கடல் சீனாவிற்கு மட்டுமன்றி அந்த கடலில் கரையில் உள்ள மற்ற நாடுகளுக்கும் முக்கியமானது ஆகும். உலகின் மற்ற நாடுகளுக்கு 4டிரில்லியன் டாலர் இதன் வழியே நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here