அதிர்ச்சி தகவல் :- 2020ல் சீனாவில் குழந்தை பிறப்பு சரிவு

0
31

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான சீனா டெக்னாலஜியில் முன்னோடியாக இருக்கிறது. தற்போது சீனா முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

2020ம் ஆண்டில் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அமைப்பு தெரியப்படுத்தி உள்ளது. கொரோனாவையும், பொருளாதார சரிவையும் எதிர்த்து போராடி வந்த சீனா வளர்ச்சி பாதையில் இருந்தது. ஆனால் தற்போது 40 வருட சரிவு என்ற பெயரை குழந்தை பிறப்பு விகிதத்தில் சீனா கொண்டுள்ளது.

குழந்தை பிறப்பு குறைவு

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 10.41 சதவீதமாக 2019 ம் ஆண்டில் இருந்தது. ஆனால் 8.52 சதவீதமாக 2020 ம் ஆண்டு குறைவாக உள்ளது.2021 ம் வருட புத்தகத்தில் 1978க்கு பிறகு குழந்தை பிறப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு குறைந்துள்ளதாக சீனாவின் புள்ளியின் விவரத்தில் தெரியவந்துள்ளது.

பெண்களின் விகிதம்

2020ல் 1.2 கோடி குழந்தைகள் சீனாவில் பிறந்துள்ளது என புள்ளியியல் தரவுகள் கூறுகிறது. ஆனால் சீனாவில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் 1.3 விகிதம் உள்ளன.இது நீண்ட கால அடிப்படையில் பெரிய பிரச்சனையாக மாறும் என தெரிகிறது.

பெற்றோர்களுக்கு சுமை

விலைவாசி சீனாவில் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தையை வளர்ப்பது பெண்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. ஒற்றை குழந்தை கொள்கையை நீக்கிய பின்பும் நிதிநிலையில் சிறப்பாக இருக்கும் மக்களும் ஒரு குழந்தை போதும் என்ற மனப்பான்மையில் உள்ளனர்.

இளைஞர்கள் மனப்பான்மை

சீன இளைஞர்களின் மனப்பான்மையில் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. பல இடங்களில் இதுபோன்ற எண்ணம் மக்களிடையே பரவி வருகிறது.

சமூகவலைத்தளத்தில் ஆய்வு

சீனாவின் முன்னணி சமூகவலைத்தளமான வெய்போ-வில் ஒரு குழந்தை போதும் என்ற மனப்பான்மையும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற மனப்பான்மையும் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 57,000 பேர் கலந்து கொண்டனர். அதிகப்படியான விலைவாசி என்ற காரணத்தை அதிகமானோர் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here