Beast-KGF-2! : ஒரே நேரத்தில் வெளியாகும் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப்-2 படங்கள்!

0
66

ரிலீஸ் தேதி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து அதற்கு மறுநாள் 14 ஆம் தேதி கேஜிஎஃப்-2 வெளியாகவுள்ளது.

எதிர்பார்ப்பு

கேஜிஎஃப் முதல் பாகமானது பெரும் கவனத்தை பெற்றதால் இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் நடிக்கும் பீஸ்ட் தமிழ் மட்டுமல்லாது இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால் இந்த படத்திற்கும் இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் யஷ் கூற்று

கேஜிஎஃப்-2 ட்ரைலர் விழாவில் பேசிய நடிகர் யஷ் சீனியர் நடிகரான விஜய் மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும், போட்டியாக தனது படம் வெளியிடப்படவில்லை எனவும் கூறினார்.

பீஸ்ட் இயக்குனர் நெல்சன்

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கேஜிஎஃப்-2 ட்ரைலரை வெகுவாக பாராட்டியுள்ளார். அப்படத்துக்காக ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here