Massage Center ‘ஸ்பா மசாஜ் சென்டர்’ மற்றும் பெண்கள் அழகு நிலையம்; தொடர்ந்து செயல்பட .. கவுன்சில் கூட்டத்தில் நடவடிக்கை:

0
42
Massage Center '

‘ஸ்பா மசாஜ் சென்டர்’ மற்றும் பெண்கள் அழகு நிலையம்
தொடர்ந்து செயல்பட நடவடிக்கை:

‘ஸ்பா மசாஜ் சென்டர்’ மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று புதிய விதிகளை மாநகராட்சி உருவாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலும் வழங்கப்பட்டது.

மாநகராட்சி உருவாக்கியா புதிய விதிமுறைகள்:

மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையம் தொழில் உரிமம் பெறுவதற்கு தியணைப்பு துறை , போக்குவரத்து துறை , மாசு கட்டுப்பாட்டுவாரியம் ஆகிய துறைகள் அடங்கிய குழுவினர் அனுமதி அளிப்பார்கள். இதன் அடிப்படையில் ;

சென்டர்கள் செயல்படும்போது கதவுகள் பூட்டிய நிலையில் இருக்க கூடாது, மாறாக திறந்து இருக்க வேண்டும் .

அனுமதியளிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்க கூடாது.

எந்த வகையிலும் பாலியல் தொடர்பான நிகழ்வுகள் நடக்க கூடாது. காவல் துறையினர் சோதனை செய்வதற்கான உரிமம் பெறல் வேண்டும்.

சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு அனுமதி வழங்க்க கூடாது.

ஒரு ஆளுக்கு சேவை வழங்கிய பின் கருவிகளை சுத்த படுத்திவிட்டு அடுத்தவருக்கு சேவையை வழங்க வேண்டும்.

பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய அழகு சாதனா பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

அழகு நிலையத்திற்காக உரிமை பெற நினைக்கும் நபர் அதற்கான படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here