Sri Lanka! : பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள இலங்கை!

0
50

பொருளாதார வீழ்ச்சி

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசாங்கம் சிக்கியுள்ளது. இங்கு மக்கள் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள்களை பெற்றுக்கொள்வதில் திணறி வருகிறார்கள்.

sri lanka 7

கப்பல்கள்

இலங்கை கடற்பரப்பில் அனைத்து பொருள்களுடன் பல கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளது. அந்த பொருள்களை இறக்க போதிய பணம் இன்மையால் மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

sri lanka 8

உதவி

இந்த நிலையில் இந்தியாவின் பெரும் உதவியை இலங்கை அரசு கேட்டுள்ளது. இலங்கை ஏற்கனவே பெருந்தொகையான கடன்களையும், உதவிகளையும் பெற்றுள்ளது. மீண்டும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக தருமாறு இந்தியாவை கோரியுள்ளது.

sri lanka 1

இலங்கை வந்த அமைச்சர் சுப்பிரமணியம்

நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். இந்தியா எண்ணெய் நிறுவனமான ஐஓசி நிலையத்திற்கு வந்த போது அங்குள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளர்.

sri lanka 6

மக்கள் கருத்து

கடந்த சில மாதங்களாக நாட்டு மக்கள் எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொள்ள திணறி வருகின்றனர். அதனை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொள்கின்றனர். எந்த அமைச்சரும் அங்கு வந்து மக்களின் கஷ்டங்களை கண்டுகொள்ளவில்லை என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here