Sub Collector அரசு நிலத்தை மீட்ட சப் -கலெக்டர்: வேலையிலிருந்து நீக்கம் ; நடந்தது என்ன?

0
36

தேனீ மாவட்டம்:

தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஜூலை 7 ம் தேதி ரிஷப் என்பவர் சப் -கலெக்டர் பொறுப்பேற்றார். இவர் பதவி பொறுப்பேற்ற அடுத்த நாளே வடவீரநாயகன்பட்டி தாமரைக்குளம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் டிஜிட்டல் ‘அ’ பதிவேடுகளை அதிகாரிகள் திருத்தி தனிநபர்களுக்கு பட்டா பதிவு செய்து கொடுத்த மோசடியை அறிந்தார்.

sub collector 4

சப் -கலெக்டர் எடுத்த நடவடிக்கை:

இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் முன்னாள் ஆர்.டி.ஓ. க்கள் சர்வேயர் உட்பட 15பேர் மீது அரசியல் வாதிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தார். இவர்களின் மீது புகார் அளித்தார். இதில் உதவியாளர் ஒன்றிய செயலாளர் உள்ளிடட 15 பேர் கைது செய்யப்பட்டனர் .

மேற்கொண்டு இது மட்டுமல்லாமல் தேனீ மாவடடம் பெரிய குளம் தாலுக்காவில் அரசியல் வாதிகள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படட ரூபாய் 150 கோடி மதிப்பிலுள்ள 21ஏக்கர் புறம்போக்கு நிலங்களை மீடடார். அதுமட்டுமல்லாமல் அந்த நிலங்களை அரசு நிலங்களாகவே பட்டா பதிவு செய்தார். இதற்காக ரிஷப்- பை தலைமை செயலாளார் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் இவரை பாராட்டினர்.

sub collector 2

சப் -கலெக்டர் மாற்றம்:

இதனைதொடர்ந்து மஞ்சளாறுஅணை அருகே அரசுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பதை கண்டறிந்து விசாரணையை துவக்கிய நிலையில் அரசியல் அழுத்தத்தால் திருநெல்வேலி மாவடடம் சேரன் மாதேவி சப்கலெக்ட்ராக மாற்றப்படடார். சப் -கலெக்டர் மாற்றத்தால் அரசுநில அபகரிப்பு நீரத்து போகும் நிலை உருவாகும். மேலும் இவருடைய காலத்தில் மணல்திருட்டும் முமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here