Tamil Actor updates 2022 : ஹரிஷ் உத்தமன் மலையாள நடிகை சின்னு குருவில்லாவுடன் திருமணம்!

0
62
marriage

ஹரிஷ்

சினிமாவில் வில்லன், துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஹரிஷ் உத்தமன். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸில் சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.

படங்கள்

தா, பாயும் புலி, பவர், ஸ்ரீமந்துடு, தொடரி, தனி ஒருவன், பைரவா, துவ்வாத ஜெகநாதம், கவசம், வினய வேதய ராமா, கைதி, புஷ்பா, வி மற்றும் ஈஸ்வரன் ஆகியவை அவரது முக்கிய படங்கள்.

விருது

2010 ஆம் ஆண்டு வெளியான தா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய இவர் இந்த படத்தின் மூலம் விருதையும் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அம்ரிதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சிறு காலத்திலேயே பிரிந்தனர்.

திருமணம்

தற்போது ஹரிஷ் உத்தமன் மலையாள நடிகையான சின்னு குருவில்லாவை திருமணம் செய்துள்ளார். இவர் ஃபகத் பாசில் நடிப்பில் தேசிய விருது பெற்ற நார்த் 24 காதம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here