Tamil Cinema news 2022:பிரச்சனைகளை கடந்து சினிமாவில் சிகரம் தொட்ட சிம்பு ….

0
64

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவரை ஒருநாள் ஹீரோ என சொல்லி விட முடியாது . அப்படி ஹீரோவாகும் நபர்கள் தான் எப்போதும் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு முன்னணி நடிகராக நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் சிம்பு இதை ஒரு மேஜிக் போல நிகழ்த்திக் காட்டினார்.

குழந்தை நட்சத்திரம்

சிம்புவை குழந்தை நட்சத்திரமாக நினைக்கும் போது எம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என ஆடி பாடியது நினைவிற்கு வருகிறது . குழந்தை நட்சத்திரமாக அவர் ஒரு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்த விட்டார் சிம்பு . இவர் கிட்டத்தட்ட 12 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார்.

காதல் அழிவதில்லை

பின்னர் ‘காதல் அழிவதில்லை’ எனும் படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார் சிம்பு .அந்த படம் 2002 தீபாவளிக்கு வெளியானது . எதிர்பார்த்த அளவுக்கு படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சிம்புவின் நடனம், வசன உச்சரிப்பில் தனி ஸ்டைல் ரசிகர்களிடம் கவனம் பெற்றன.

சிம்பு

பின் கோவில், மன்மதன் என சிம்பு எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் வெற்றியைப் பெற்று தந்தது . பின் அவருக்கு முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தையும் அவருக்கு வழங்கப்பட்டது. பின் சிம்பு வல்லவன் படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார்.

ரசிகர்கள்

சிம்பு படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பதை அடித்து நொறுக்கியது விண்ணைத்தாண்டி வருவாயா . சிம்புவை பிடிக்காமல் இருந்தவர்களுக்கு இந்தப் படம் மூலம் அவருக்கு ரசிகர்களாக மாறினர். திரை வாழ்க்கையில் சிம்பு வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்த்தார். ஆனால் ஒருபோதும் அவர் தன்னம்பிக்கையை இழக்காமல் தைரியமாக இருந்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here