National Athletics! : தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் முதலிடம்!

0
83

மகளிர்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 61 ஆவது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நான்காம் நாளாகிய நேற்றைய தினம் தமிழக வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்று தமிழக வீராங்கனைகள் களம் கண்டனர்.

கிரேஷினா

ஆரம்பத்திலேயே அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீராங்கனை கிரேஷினா அந்தரங்கத்தில் பறந்து அரங்கத்தை அதிரவைத்துள்ளார். இறுதியாக 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார்.

sports 2

பதக்கம்

1.78 மீட்டர் தாண்டிய ஹரியானா வீராங்கனை இரண்டாவது இடத்தையும், 1.76 மீட்டர் தாண்டிய கேரள வீராங்கனை வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்.

போட்டிகள்

இன்றுடன் போட்டிகள் நிறைவடையும் நிலையில் புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில நீடிப்பதால் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here