Tamil news today 2022 : குடியரசு தினவிழாவை முன்னிட்டு வஉசி மைதானத்தில் கொடியேற்றும் ஆட்சியர்!

0
65
republicday

வஉசி மைதானம்

நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நிலையில் கோவையில் நிர்வாகம் சார்பில் வஉசி மைதானத்தில் காலை குடியரசு தினவிழா நடைபெறுகிறது. இதில் ஆட்சியர் சமீரன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளார்.

கலை நிகழ்ச்சிகள்

கொரோனா காரணமாக குடியரசு விழாவில் பொதுமக்கள் பங்கேற்பு, பள்ளி, கல்லூரிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்க உள்ளார்.

பாதுகாப்பு

மாவட்டம் முழுவதும் 2,500போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்புகள் வெளியாகிறது.

சோதனை

குடியரசு தினவிழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here