Tamil news today 2022 : குடியரசு தினவிழா அணிவகுப்பு!

0
66
republicday

குடியரசு தினவிழா

நாட்டின் 73வது குடியரசு தினவிழா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறவுள்ளது. ராஜபாதையில் நடைபெற உள்ள பிரதான அணிவகுப்பு , பாசறை திரும்புதல் நிகழ்ச்சியின் போது பல்வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அரசு

ஆண்டுதோறும் ஜனவரி 23-30வரை ஒரு வார காலத்திற்கு குடியரசு தினத்தை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23 தொடங்கி ஜனவரி 30 தியாகிகள் தினம் நிறைவடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிகழ்வுகள்

  • தேசிய மாணவர் படையினரின் நூற்றுக்கணக்கான வணக்கங்கள் தியாகிகளுக்கு வழங்கப்படுகிறது.
  • இந்திய விமான படையின் 75 விமானங்கள் பங்கேற்கும் கண்கவர் அணிவகுப்பு.
  • நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 480 நடன கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சி.
  • காலா கும்ப் நிகழ்ச்சியில் 75 மீட்டர் உடைய பத்து சுருள்களின் காட்சி.
  • பார்வையாளர்களின் வசதிக்காக எல்இடி திரைகளை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அணிவகுப்பு நேரம்

பார்வையாளர்கள் காண்பதற்கு ஏகுவாக இந்த முறை காலை 10.30 மணிக்கு அணிவகுப்பு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here