Tamil news today 2022 : பாஜக தனித்து போட்டியிடுவது குறித்து இன்று முடிவு!

0
62
BJP

ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பாஜக வட்டாரங்கள் கூற்று

தமிழக பாஜக தலைவர் கட்சியை பலப்படுத்த மாவட்ட வாரியாக சென்று கட்சியினரை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார். திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல போராட்டங்களை நடத்துவதால் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.ஒவ்வொரு வார்டிலும் பாஜகவுக்கு இருந்த ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி தொடரும் பட்சத்தில் பாஜகவுக்கு 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே கிடைக்கும். அதில் பாஜக வெற்றி பெற்றாலும் மாநிலம் முழுவதும் பாஜக பெறும் ஓட்டு சதவீதம் மற்ற கட்சிகளுடன் குறைவாகவே இருக்கும்.

Tamil News large 2947574202201280744137

தனித்து போட்டி

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பாஜக தனித்து போட்டியிட்டால் திமுக, அதிமுக அடுத்ததாக பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உறுதி செய்யப்படும்.

கூட்டம்

மாநில மைய குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திநகரில் உள்ள கட்சி அலுவகலகத்தில் நடக்கும் கூட்டத்தில் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here