Tamil viral News 2022 : ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை குறித்து ஆனந்த் மஹிந்த்ரா புகழாரம்!

0
65

ஆட்டோ ஓட்டுநர்

அண்ணாதுரை அவருடைய ஆட்டோவில் இலவச வை-பை, நாளிதழ்கள், வார இதழ்கள் என பயணிகளை கவர பல வசதிகளை வைத்திருக்கிறார். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு குழந்தைகள் தினம், அன்னையர் தினங்களின் போது தள்ளுபடி விலையில் சவாரி செய்வார். இவர் ஐந்தாண்டுகளுக்கும் மேல் இவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஆட்டோ ஓட்டும் பணிக்கு விரும்பி வரவில்லை என்றாலும், கிடைத்த வேலையை விரும்பி செய்து வருகிறார்.

வசதிகள்

இவரது ஆட்டோவில் மடிக்கணினி, ஐ-பேட், டேப், குளிர்சாதன பெட்டி, சாக்லேட், இதழ்கள் என பல வசதிகளை வைத்துள்ளார். மற்ற ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே இந்த ஆட்டோவில் வசூலிக்கப்படுகிறது.

கட்டணம்

அவரது ஆட்டோவில் ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லை என கூறியுள்ளார். கொரோனாவிற்கு பின் துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மூன்று துறையை சேர்ந்தவர்களுக்கு கட்டணம் கிடையாது என வியப்பை ஏற்படுத்துகிறார்.

ஆனந்த் மஹிந்திரா

அண்ணாதுரை குறித்து வெளியிட்ட வீடியோவை பார்த்த மஹிந்திரா தலைவர் அவரை புகழ்ந்துள்ளார். அவரை குறித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அண்ணாதுரையை பேராசிரியர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here