Extremists தீவிரவாதிகள் தாக்குதல்: காவலர் வீரமரணம் …

0
49
தீவிரவாதிகள் சுட்டு கொலை :

ஜம்மு காசுமீரில் நேற்று நடைப்பெற்ற துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களுக்கு இடையேயான துப்பாக்கி சண்டையில் காவலர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளின் தாக்குதல்:

ஜம்மு காசுமீர் மாநிலத்தை சேர்ந்த ‘குப்வார, ஜு மாகுண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தீவிரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினரும், ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
திவீரவாதிகள் அங்கு பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் நேருக்கு நேர் தாக்குதல் நடத்தினர். இதில் கடுமையான துப்பாக்கி சூடு நடந்து அதே இடத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காவலர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து காவலர்கள் மற்றும் ராணுவவீர்கள் தீவிரவாதிகளை தேடும் தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here