ஒரு ஆட்டின் விலை ரூ. 15.6 லட்சமாம்!

0
107

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மராகேஷ் என்ற ஆடு 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கு விற்கப்பட்டு உலகிலேயே விலை உயர்ந்த ஆடு என்ற சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாண எல்லைக்கு அருகில் உள்ள ரங்லேன்ட் ரெட்ஸ்டட் என்ற இடத்தில் வளர்க்கப்பட்ட மராகேஷ் என்ற பெயர் கொண்ட ஆடு மேற்கு நியூ சௌத்வீல்யில் உள்ள கோபார் நகரில் விற்பனைக்கு வந்தது. இந்த ஆட்டை ஆடு வளர்ப்பில் சிறந்தவராக திகழும் ஆன்ட்ரூ மோஸ்லி என்பவர் 21 ஆயிரம் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்.
அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த ஆட்டை வாங்கியுள்ளார்.

மராகேஷ் ஆடு ஏன் விலை உயர்ந்தது என்பதை விளக்கிய மோஸ்லி அவற்றின் இனத்தில் குறைந்த எண்ணிக்கையில் எஞ்சியிருப்பதே இதற்கு காரணம் என்று தெரிவித்தார். மேலும் இந்த ஆடு மிகவும் ஸ்டைலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு ப்ரோக் என்ற ஆடு 8.9 லட்சத்திற்கு விற்பனையானதே உலகின் மிக விலைஉயர்ந்த ஆடாக இருந்தது. தற்போது 15.6 லட்சத்திற்கு மராகேஷ் ஆடு விற்கப்பட்டு அந்த சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன்பு விலைஉயர்ந்த ஆடாக இருந்த ப்ரோக் என்ற ஆட்டையும் இதே ஆன்ட்ரூ மோஸ்லி தான் வாங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here