Indian Rupee: மீண்டும் சரிவை நோக்கி சென்ற இந்திய ரூபாயின் மதிப்பு…!

0
45

வர்த்தகம்

அமெரிக்க மத்திய வங்கி வட்டி உயர்வை அறிவித்தது. இந்த அறிவிப்பால் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை கண்டது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. அந்நிய செலவாணி வர்த்தகம் நேற்றைய தினம் மிக மந்தமாக நடந்துள்ளது.

இறுதி மதிப்பு

நேற்றைய தினம் நடைபெற்ற சந்தையில் இறுதியாக 80.86 மதிப்பை கொண்டுள்ளது. இன்றைய தினம் மேலும் சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காலை நேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 81ஐ தாண்டியுள்ளது.