Chennai Super Kings! : சென்னை அணிக்கு கிடைத்த மூன்றாவது வெற்றி! ருதுராஜ் ஆட்டம் சிறப்பு!

0
52

அணிகள்

புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் டி-20 கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸினை வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.

chennai team 2

ருதுராஜ்

அட்டகாசமாக ஆடிய ருதுராஜ், உம்ரான் மாலிக் வீசிய 8ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசியுள்ளார். 11 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய ருதுராஜ் 12 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்துள்ளார்.

ruturaj chennai player 1

கான்வே

இவர் ஜான்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பி 39 பந்தில் அரைசதம் எட்டியுள்ளார். தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்ந்தபோது சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

chennai team 6

சென்னை அணி

கேப்டன் தோனி ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் ஆட்டத்தினை இழந்தார். கான்வே 2 பவுண்டரி அடிக்க 200 ரன்களை கடந்தது. சென்னை அணியானது 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 202 ரன் குவித்தது.

chennai team 1

ஐதராபாத் அணி

சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு துவக்கம் நல்லதாக இருந்தது. கடைசி ஓவரில் ஐதராபாத் அணிக்கு 38 ரன்கள் மொத்தம் தேவைப்பட்டன. 20ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த பூரன் அரைசதம் அடித்துள்ளார். இந்த ஓவரில் 24 ரன்கள் மட்டுமே அணிக்கு கிடைத்தன. ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

Hyderabad team

சென்னை வெற்றி

இத்தொடரில் முதன்முறையாக கேப்டனாக களமிறங்கிய தோனி சென்னைக்கு 3 ஆவது வெற்றியை பெற்றுத்தந்தார். சென்னை வீரர் ருதுராஜ் ஐபிஎல் அரங்கில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். 31 போட்டியில் மொத்தம் 1076 ரன் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here