Dolphins! : ரஷ்ய கடற்படைகளை பாதுகாக்க டால்ஃபின்களுக்கு பயிற்சி!

0
50

டால்ஃபின்கள்

காலாகாலமாக மனிதர்களின் உற்ற நண்பர்களாக செயல்பட்டு வரும் உயிரினங்களில் ஒன்று கடலின் அடி ஆழத்தில் வசிக்கும் டால்பின்கள். விலங்குகளை வைத்து வித்தை காட்டுவதை மனிதர்கள் பல வருடங்களாக செய்து வருகிறார்கள்.

அரசு பாதுகாப்பு

வளர்ப்பு டால்பின்களை சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளில் வித்தை காட்டும் உயிரினமாக வளர்த்து வருகிறார்கள். தற்போது கருங்கடலில் உள்ள டால்பின்களை ரஷ்ய பாதுகாப்பு படையாக பயன்படுத்துவது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்

கருங்கடலின் அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் துறைமுகத்தின் வாயிலில் இரண்டு டால்பின்கள் காவல்காரர்கள் போல செயல்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

பயிற்சி

உக்ரைன் கடற்படையில் இருந்து ரஷ்ய கடற்படையை தற்காத்துக்கொள்ள டால்பின்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ரஷ்ய போர்கப்பல்களை பாதுகாக்கவும், எதிரிகள் எல்லைக்குள் வந்தால் உடனடியாக சத்தமிட்டு அறிவிக்க டால்பின்கள் பயன்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here