Vijay’s rising market for film! : படத்துக்கு படம் உயர்ந்து வரும் விஜய்யின் மார்க்கெட்!

0
33

வரவேற்பு

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பீஸ்ட் படம் ஏப்ரலில் வெளியாகிறது. ஏப்ரல் 13 அன்று வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

பார்வை

முதல் பாடலான அரபிக்குத்து 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. இரண்டாவது பாடலும் யூடியூப் பார்வையில் தற்போது பல சாதனை படைத்து வருகிறது.

நெல்சன்

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியிருப்பது படத்துக்கு அதிக வரவேற்பை கொண்டுள்ளது. இந்த படத்தின் வெளிநாடு திரையரங்கு விநியோக உரிமை சுமார் 38 கோடிகளுக்கு விலை பெற்றுள்ளது. விஜய் நடித்த படங்களில் முதல் முறை இதுவே அதிகபட்சமாகும்.

சாதனை

ரஜினி, ஷங்கர் போன்ற இயக்குனருடன் சேரும்போது மட்டுமே இந்த விற்பனையை அந்த படங்கள் தாண்டிச் செல்லும். பீஸ்டின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உரிமைகளும் இதுபோன்று சாதனை விலைக்கு வாங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

பீஸ்ட்

இந்த படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான இசையை அனிருத் இயக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here