ரூபாய் 6 கோடி வருமானம் சம்பாதித்த கிராமத்து எம்.பி.எ மருமகள்

0
34

இந்தியாவில் படிப்பை மிகப்பெரிய அளவில் நம்பும் மக்கள் கொண்ட மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். பணக்காரர்கள் முதல் ஏழைக்குடும்பங்கள் வரை அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக தான் திருப்பூரில் ஒரு கிராமத்தில் எம்.பி.எ மருமகள் செய்த அற்புதத்தை காண்கிறோம்.

நடுத்தர குடும்பம்

கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியில் பிறந்த சிந்து ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர். சிந்துவின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர் பணிபுரிகிறார்கள். படிப்பில் கெட்டியாக இருந்த சிந்து தமிழ் வழியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். பின் பி.டெக் ஐடி படிப்பை மஹாலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.

சிந்துவின் ரசிகரான இந்திரா நூயி

பெண்கள் சிறுவயதில் சினிமா ஸ்டார், விளையாட்டு வீரர்கள் மீது ஆர்வம் காட்டுவார்கள். சிந்து பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி அவர்களின் ரசிகராக இருந்துள்ளார். அவருடைய புகைப்படத்தை பள்ளியில் படிக்கும் போதே தனது வீட்டில் வைத்துள்ளார் சிந்து.

எம்.பி.ஏ பட்டம்

பிரிட்டன் நாட்டில் இருக்கும் கல்லூரிகளில் ஒன்றான வார்விக் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். பட்டம் பெற்றபிறகு சில வருடம் லண்டனில் பணியாற்றினார்.

விற்பனையில் ஈடுபட்ட சிந்து

சிந்து 2009 ல் இந்தியா வந்துள்ளார். அவருடைய சகோதரர் உடன் சேர்ந்து மொபைல் போன் மற்றும் புத்தகங்களை விற்பனை செய்ய தொடங்கி 2 வருடத்தில் இந்த வர்த்தகம் மூடப்பட்டது.

திருமணம்

சிந்து திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு கிராமமான மொடக்குப்பட்டி-ஐ சேர்ந்த அருண் என்பவரை திருமணம் செய்துள்ளார். அருண் குடும்பத்தார் கொப்பரை தேங்காய் விற்பனையில் உள்ளது.

கூட்டு குடும்பம்

கடைகள் மூலம் கொப்பரை தேங்காயினை விற்பனை செய்து வந்துள்ளது. விவசாய துறையில் அவர்களின் பெற்றோர் இருப்பதால் அனைத்தும் குடும்ப வர்த்தகமாக இருந்துள்ளது. அருண் அவர்களின் குடும்பம் கூட்டு குடும்பமாக இருந்தது.

பெண் குழந்தை

சிந்து – அருண் இருவருக்கும் திருமணமான ஒரு வருடத்திலேயே பெண் குழந்தை பிறந்தது. சிந்துவின் மாமியார் குழந்தைக்கு 6 மாதம் ஆன போதும் வர்த்தகத்தில் ஈடுபட ஊக்கமளித்துள்ளார்.

வர்த்தகத்திற்கு தடை

அருண் – சிந்து இருவரும் இணைந்து வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்த நிலையில் வர்த்தகம் எந்த வித பெயரும் இல்லாமல் பதிவு செய்யாமல் போனது அடுத்தகட்டத்துக்கு செல்ல தடையாக இருந்தது.

வர்த்தகத்தை பதிவு செய்த சிந்து

முதலில் குடும்பத்தினருடன் பேசி வர்த்தகத்தை பதிவு செய்தார் சிந்து. 2013ல் எவர்கிரீன் எண்டர்ப்ரைசர்ஸ் என்ற பெயரில் தேங்காய் வர்த்தகத்தை பதிவு செய்தார்.

ஒப்பந்தம்

சிந்து தரப்பு பணிகளை சீர்படுத்த மேற்பார்வையாளர் மற்றும் ஒரு கணக்காளரையும் நியமித்தார். இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான மாரிக்கோ உடனான ஒப்பந்தத்தை எவர்கிரீன் எண்டர்பிரைசஸ் புதுப்பித்தது.

சிந்துவின் சப்ளை

தேங்காய்க்கு பதில் கொப்பரை தேங்காயை 2014 முதல் மாரிக்கோ நிறுவனத்திற்கு சப்ளை செய்ய துவங்கினார். அக்ரிப்ரோ இண்டஸ்ட்ரீஸ் என்ற புதிய நிறுவனத்துடன் வர்த்தகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்.

எண்ணெய் தயாரிப்பு

அக்ரிப்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாயிலாக எண்ணெய் தயாரித்து presso என்ற பெயரில் அறிமுகம் செய்தார் சிந்து.

இயந்திரம் வாங்குதல்

செக்கு எண்ணெய் தயாரிக்க இயந்திரங்கள், அலையை கட்டமைக்க 12 லட்ச ரூபாயை உறவினர், நண்பர்களிடம் வாங்கினார். 8 லட்ச ரூபாயை சிந்துவின் நகைகளை வைத்து தளம் அமைக்கப்பட்டது.

உற்பத்தி

சிந்து- அருண் தேங்காய், கடலை, எள் ஆகியவற்றை உள்ளூர் மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்து presso பிராண்டின் மூலம் விற்பனை செய்தார். உற்பத்தியிலும், தரத்திலும் எந்தவித குறைபாடும் இல்லாமல் அவர் உற்பத்தி செய்தார்.

வர்த்தகத்தை விரிவாக்கம்

PRESSO பிராண்ட் வெறும் கோவை பொள்ளாச்சி மட்டும் விற்பனை செய்யும் பிராண்டாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் சிந்து. ஈகாமர்ஸ் , எம்பிஏ படிப்பு, லண்டன் வேலையில் கிடைத்த அனுபவம் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து வர்த்தகத்தை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு சென்று உலகில் பல நாடுகளுக்கு வர்த்தகத்தைச் சில வருடங்களிலேயே விரிவாக்கம் செய்தார் சிந்து.

பேச்சுவார்த்தை

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, போபால் ஆகிய மாநிலங்களிலும் PRESSO செக்கு எண்ணெய் பிரபலமாகி உள்ளது. மலேசியா மற்றும் பிரிட்டன் விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.

6 கோடி விற்பனை

PRESSO பிராண்ட் 2020-2021 ம் நிதியாண்டில் எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் மூலம் சுமார் 6 கோடி ரூபாய் அளவிலான விற்பனை செய்துள்ளது.15 பெண்களை வைத்து மொத்த வர்த்தகத்தையும் சிந்து நிர்வாகம் செய்து வருகிறார்.

படிப்பு தடைகளை உடைக்கும்

நடுத்தர , சாமானிய மக்களுக்குக் கிராமம், பண பலம், ஆண் பெண் பேதம் போன்ற அனைத்தையும் படிப்பு என்ற ஒன்று ஓட செய்துவிடும். இதற்கு ஏற்றவாறு டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிராமம், டவுன், பெரு நகரம் தடைகளை உடைத்துள்ளது.

குடும்பத்தின் ஒத்துழைப்பு

அனைத்திற்கும் மேலாகக் குடும்பத்தின் ஒத்துழைப்பு, குடும்ப வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல பொறுமை மிகவும் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here