எகிப்தை  ஆண்ட அமென்ஹொதேப்  மன்னரின்  உடல்  ஸ்கேன் மூலம்  ஆய்வுக்கு அனுப்பபட்டது.

அதில்  பற்கள்  நல்ல நிலையில்  உள்ளது தெரியவந்துள்ளது. 

எகிப்தில்  வாழ்ந்த  அரசர்கள்  உடல்கள்  துணியால் சுற்றப்பட்டு  பாதுகாக்கப்பட்டு வருவதை மம்மிக்கள்  என்று அழைக்கின்றனர். 

அழிந்து போன  எகிப்து பற்றிய தகவல்களை  இந்த மம்மி  மூலமாக அறிய முடிகிறது.  

அரசரின்  மம்மியை  டிஜிட்டல் முறையில்  அவிழ்த்ததில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. 

எகிப்திய மம்மிகள் புராண நம்பிக்கைகளுடன் தொடர்புடையதால்  மரணமில்லை என கருதுகிறார்கள்.

இந்த எகிப்து கதைகளை வைத்து ஹாலிவுட் படங்கள் வெளியாகி பிரபலமாகி உள்ளது.

இந்த அரசர் கிமு 1525 -1504 வரை எகிப்தை ஆண்டுள்ளார். 

மம்மியானது  கச்சிதமாக  தயாரிக்கப்பட்டு, அழகான  மலர் மாலைகளால்  அலங்கரிக்கப்பட்டு   இருந்தது. 

அந்த  உடலின் தோற்றம், இறந்த காரணம், மம்மியாக்கும் முறை  போன்றவற்றை  விவாதித்துள்ளனர்.

குறுகிய கன்னம், சிறிய மூக்கு, சுருள்முடி, பற்கள்  போன்றவை  தெரியவந்துள்ளது.

காயங்கள் உடலில் இல்லை என ஆய்வின் அறிக்கை கூறுகிறது.