மலையாள  சினிமாவில்   கதாநாயகியாக  நடித்து வந்தவர்  ரீமா  கல்லிங்கல். 

தமிழில்   யுவன் யுவதி  என்கிற  பரத்  நடித்த படத்தில்  மட்டும் நடித்து உள்ளார். 

மலையாளத்தில்  பிரபல இயக்குனர்  ஆஷிக்  அபுவை  திருமணம்  செய்து கொண்டார். 

அதன் பிறகு  சில  படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

மீண்டும் தமிழில்  சித்திரை  செவ்வானம்  என்ற  படத்தில்  நடித்துள்ளார்  ரீமா கல்லிங்கல்.

ஸ்டண்ட்  சில்வா  இந்த படத்தின் மூலம்  முதன்முதலாக  இயக்குனராக  அறிமுகமாகியுள்ளார். 

இதில்  சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல்,   பூஜா கண்ணன்  ஆகியோர் நடித்துள்ளனர். 

ரீமா  கல்லிங்கல்  இந்த படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

முதல்முறையாக  போலீஸ் அதிகாரியாக  நடித்துள்ளேன் என்று  கூறினார். 

ஸ்டண்ட்  இயக்குனர்  படம் என்பதால்   நாலு உதைகள்  வாங்க வேண்டி இருக்கும்  என   கூறினார். 

முற்றிலும்  மாறுபட்ட  மென்மையான  படமாக  இதனை  உருவாக்கியுள்ளதாக   கூறினார்.