நான் பாதிக்கப்பட்டவள் அல்ல வாழ்க்கையில் மீண்டு வந்தவள் மனம்திறந்த நடிகை பாவனா

80க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாவனா 2017 ஆம் ஆண்டு கொச்சிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார்.

பாவனாவுடன் 12க்கு கேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்த திலீப் பெயரும் இதில் இடம் பெற்றது.

பின் திலீப் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

 சமூக வலைத்தளங்களில் நான் சிரித்த படங்களைத்தான் மக்கள் அனைவரும் பார்கிறார்கள்.

ஆனால் நான் நன்றாக வேதனையில் இருந்தேன் என பாவனா தொலைபேசியில் தெரிவித்தார்.

 பின் 2020இல் நீதிமன்ற விசாரணைக்கு நான் ஆதாரங்களை சமர்பிப்பது தொடர்பாக 15 நாட்கள் செலவிட்டேன். 

இப்போது நான் எல்லாத்தையும் கடந்து விட்டு முன் செல்ல நினைக்கிறேன். 

ஆனால் எல்லாத்தையும் மறக்க நினைக்கும் போது தான் எல்லாம் நினைவுக்கு வருகிறது.