உலக சதுரங்க  சாம்பியன்  மேக்னஸ்  கார்ல்சனை  வீழ்த்தி  சாதனை  படைத்துள்ளார்  தமிழகத்தை  சேர்ந்த  16 வயதான பிரக்ஞானந்தா மாணவர்.  

"ஏர்திங்ஸ்  மாஸ்டர்ஸ்  ரேபிட்" சதுரங்க  போட்டி  இணையம் மூலம்  நடைபெற்று  வருகிறது.   

இதில்  வெவ்வேறு  நாடுகளை  சேர்ந்த 16 வீரர்கள்  பங்கேற்றுள்ளனர்.  

இந்த சதுரங்க போட்டியில்  39 வது  நகர்த்தலின் போது  அவர்  வெற்றி பெற்றுள்ளார். 

இதனால் அந்த மாணவனுக்கு  பாராட்டுக்கள் குவிந்து  வருகின்றன. 

இந்த  வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த  உலகத்தையும் பிரக்ஞானந்தா திகைப்பில்  ஆழ்த்தி உள்ளதாக  முதல்வர்  பாராட்டி உள்ளார்.  

 மேன்மேலும்  வெற்றிகள்  குவியட்டும்"  என  முதல்வர்  தெரிவித்துள்ளார்.

பிரக்­ஞா­னந்­தா­வின் வெற்றி ஒரு மாயா­ஜா­லம் போல்  இருப்­ப­தாக கிரிக்கெட் வீரர் சச்­சின் டெண்­டுல்­கள்  கூறி­யுள்­ளார்.