Who will star in Surya’s next film? : சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

0
36

பாலா

நந்தா படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பு திசையை திறந்து வைத்த பாலா பல வருடங்களுக்கு பின் இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.

surya 3

தகவல்கள்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நாயகியாக க்ருத்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

actress 1

க்ருத்தி ஷெட்டி

இவர் ஹிர்த்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் அறிமுகமானவர். உப்பன்னா, ஷ்யாம் சிங்கா ராய், பாங்கார்ராஜு என தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் ஆகும்.

actress 2

படங்கள்

தற்போது லிங்குசாமி தெலுங்கு, தமிழில் ராம் பொத்னியேனியை வைத்து இயங்கி வரும் தி வாரியர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலா படத்தில் அவர் நடிப்பது உண்மையானால் இது அவரின் முதல் நேரடி தமிழ்படமாக இருக்கும்.

actress 3

சூர்யா

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் நடித்த முந்தைய படங்களான சூரரைப்போற்று, ஜெய்பீம் அளவுக்கு நல்ல விமர்சனங்களை பெறவில்லை என்றாலும், படம் லாபத்தை சம்பாதித்து உள்ளது.

surya 2

வாடிவாசல்

அடுத்ததாக நடிக்கும் பாலாவின் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

surya bala

எதிர்பார்ப்பு

எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் சூர்யா நடிக்கும் இந்த படத்தினை தயாரிக்கிறது. பரதேசிக்கு பிறகு பாலாவின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. பிதாமகன், நான் கடவுள் படங்களின் உச்சத்தை இந்த புதிய படத்தில் பாலா மீண்டும் தொடுவாரா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here