Why did the US refuse to impose sanctions on India? : இந்தியாவிற்கு பொருளாதார தடையினை போட அமெரிக்கா மறுத்ததன் காரணம் என்ன?

0
237

அதிபர் மாளிகை

ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை கட்டுப்பாடுகளை இந்தியா மீறவில்லை என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு எதிர்பார்த்த ஒன்று என்றாலும் இதன் பின்னால் பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளது.

கச்சா எண்ணெய்

ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணையை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உலக நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்து இருக்கும் வேளையில் ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்க மாட்டோம் என்று அமெரிக்கா கூறியபோது அதே வேளையில் இந்தியா ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய்யை வாங்க முடிவு செய்துள்ளது.

தள்ளுபடி

இந்தியாவிற்கு ரஷ்யா குறைந்த விலையில் தள்ளுபடியோடு எண்ணெய் தருவதாக கூறிய நிலையில்தான் இந்தியா கூடுதல் எண்ணையை வாங்க முடிவினை எடுத்துள்ளது. இந்தியன் ஆயில் மூலம் எண்ணெய்யை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தடை இல்லை

ரஷ்யா மீது பொருளாதார தடை இருக்கும் போது இந்தியா இந்த துணிச்சலான முடிவினை எடுத்துள்ளது. பொருளாதார தடைகள் தம் மீதும் பாயும் என்ற அம்சம் இல்லாமல் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

பேட்டி

இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது என்றும், அமெரிக்கா போட்டு இருக்கும் பொருளாதார தடைகளுக்கு எதிரானது என சொல்ல முடியாது என்றும், இந்தியா விதிகளை மீறுவதாக நான் நினைக்கவில்லை என்றும் பேட்டியில் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சீனா மீது மிரட்டல்

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய எண்ணெய்யை இந்தியா வாங்கிக்கொள்ள முடியும். இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா சீனா மீது பொருளாதார தடைகளை விதிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒதுங்கும் சீனா

ரஷ்யாவிற்கு ராணுவ ரீதியா உபகரணங்களை அனுப்பினால் கண்டிப்பாக சீனா மீது நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளது. அதேபோல் ரஷ்யாவுடன் மேலும் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டால் சீனா மீது பொருளாதார தடைகள் பாயும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுமையான எச்சரிக்கை

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மீறி சீனா உதவி செய்தால் சீனா மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவை மிரட்டாததற்கான காரணம்

  • சீனாவின் ரஷ்ய ஆதரவும் இந்தியாவின் ரஷ்ய சார்பும் ஒன்று அல்ல. இந்தியா தேவை கருதியே ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகிறதே தவிர சீனா போல மேற்கு உலகினை இந்தியா எதிர்க்கவில்லை.
  • இந்திய ரஷ்ய ஆதரவை வெளிப்படையாக எடுக்க்கவில்லை, நடுநிலையோடு இருக்கவே இந்தியா விரும்புவதால் பொருளாதார தடைகளை விதிக்க முடியாது.
  • ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவிற்கு மட்டும் பொருளாதார தடையினை போட முடியாது.
  • மேற்கு உலக நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இப்போது நட்பு நாடுதான். எதிர்காலத்தில் சீனாவின் வளர்ச்சியை தடுக்க இந்தியா தேவை என்பதால் எளிதாக இந்தியா மீது தடைகளை போட முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here