Will Bhagya withdraw from the serial! : பாக்கியலட்சுமி சீரியல் பாக்யா சீரியலிலிருந்து விலகுவாரா!

0
65

பாக்கியலட்சுமி

பொதுவாக லேடீஸ் மேட்டரில் சிக்கும் ஆண்களை பெண்கள் கடுமையாக நடந்து கொள்வதுண்டு. ஆனால் ஆண்களே கடுப்பாகும் அளவிற்கு அசட்டு புத்திசாலியாக வாழும் ஒரு சீரியல் கதாபாத்திரம் தான் விஜய் டிவி பாக்கியலட்சுமியின் கணவர் கோபி.

ரசிகர்கள்

இந்த சீரியலில் இவர் எப்பொழுது பாக்யாவிடம் மாட்டுவார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஒருபக்கம் ராதிகா, மறுபக்கம் பாக்யா நடுவுல கோபி மாட்டிகிட்டு நிக்க வேண்டியது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறிவிட்டது.

ரசிப்பு

பாக்கியாவாக நடிக்கும் கதாபாத்திரம் ஒரு உலக மகா வெள்ளந்தியாக இருப்பதால் தான் இந்த சீரியல் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. இதன் காரணமாகவே பாக்கியா எனப்படும் சுசித்ராவிற்கு பல ரசிகர்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

செய்திகள்

சில நாட்களாக நடிகை சுசித்ரா அந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதிலாக வேறொரு பிரபலமான நடிகை நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதனை குறித்து அவரிடம் ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர்.

அவர் கூறிய பதில்

அவர் இப்பொழுதும் சீரியல் சூட்டிங்கில் இருப்பதாகவும், சீரியல் நன்றாக போய்க்கொண்டு இருப்பதாகவும், சீரியல் ப்ரோமோஷன் வேலையிலும் பிஸியா இருக்கேன் என்றும், அது பொய்யான செய்திகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here