Actor Ajith kumar! அஜித் படத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்!

0
61

ஒப்பந்தம்

சினிமாவில் திரைக்கு பின்னால் பணியாற்றும் ஊழியர்களின் நலனை மனதில் கொண்டு சினிமாவில் பல விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன. ஒரு படத்தை தயாரிக்கும் போது அதில் பணியாற்றுவதற்காக FEFSI ஊழியர்களை படத்தின் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் இருந்தது.

சங்கம்

FEFSI ஊதிய உயர்வினை கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ஆர்.கே செல்வமணி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அறிவித்தார். இவ்வாறு அறிவித்தது ஏற்புடையதாக இல்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்று நேற்றைய தினம் வெளியிட்டது.

அறிக்கை

தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்திற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஒப்பந்தம் காலங்காலமாக இருந்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆர்.கே செல்வமணி கூற்று

வருகின்ற 8ஆம் தேதி நடிகர்கள் சங்க பொதுக்குழு நடைபெற உள்ளது என்றும், அனைவரும் இதில் கலந்துகொள்ள சென்னையில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது எனவும் கூறினார். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் FEFSI தொழிலாளர்களை பயன்படுத்தி கொள்ள மாட்டோம் என கடிதம் வரவில்லை என்றும், அது குறித்து அறிக்கை வெளியிட்டதாக நண்பர்கள் கூறினர்.

அஜித் படப்பிடிப்பு

பல முன்னணி நடிகர்களும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தாதது குறித்து ஏன் FEFSI அமைதி காக்க வேண்டும் என கேட்டனர். பெரிய நட்சத்திரங்களிடம் FEFSI தொழிலாளர்கள் நிலை குறித்து பேசியதால் அவர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது என சில படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டது.

கோரிக்கை

அஜித்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்துவதால் பல தொழிலாளர்கள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள் என அஜித், தயாரிப்பாளர், ஹெச்.வினோத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ஆர்.கே.செல்வமணி.

விஜய் படம்

இருமொழிகளில் படம் செய்யும்போது வேறு இடத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்றார் போல அடுத்த படத்தில் சென்னையில் படப்பிடிப்பு வைத்து பணியாளர்களுக்கு செய்து கொடுப்பார். தொடர்ச்சியாக வெளி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்துவது ஏற்புடையதாக இல்லை என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here