Yuvan Shankar Raja to attend ‘Dubai Expo’ : “துபாய் எக்ஸ்போ” கண்காட்சியில் பங்கேற்க உள்ள யுவன் சங்கர் ராஜா!

0
51

இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மார்ச் 20 அன்று துபாயில் நடைபெற உள்ளது.

இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

துபாய் எக்ஸ்போ

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் வருகிற மார்ச் 20 ஆம் தேதி துபாய் செல்கிறார். துபாயில் உள்ள ஜுபிலி பூங்காவில் நடைபெறவுள்ள துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக டுவிட்டரில் இவர் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here